பேரன்பு

நொடிக்கொரு அன்புச் சந்தா கட்டி வருகிறது மனம்,
தொகைமிகுதியோ வக்கனையாய் வடிவம் தேடுகிறது பேரன்பில்!,

ஊடல்களை புதுப்பு எழுதுகிறது பொய்மனம்,
காலக் குகையில்
அடைந்து கிடக்கிறது
முட்கள் களிக்கப் படாத தண்டி,

முட்கள் இடுக்கில் மெலிதாய்
அழகியம் ஒளிபரப்புகிறது
காடைமுட்டை,
மகிழுந்து சக்கர இடுக்கில் மாட்டி பிட்டைப் பிடித்துக் கொள்கிறது கானகச்செஞ்சகதி,

சில்வண்டிற்கு எகத்தாளமாய்
யசப்பாட்டு படிக்கிறது தேன்சிட்டு, நடைதிறந்தே கிடக்கிறது
கல்லுக்கட்டி முனிக்கோயில்,

தினமொரு தொட்டில் கட்டிக்கொள்கிறது குழந்தைவரமருளும் மரம், வேப்பங்கொட்டை சேமிக்கிறாள்
மூதாட்டி,

அணிவகுப்பில் ஒன்றிரண்டு விலகுகிறது செம்மறி,
மதிய ஆகாரம் தணிக்கிறது
சோளக் கூழ்,

கலவை அளவு கற்பிக்கிறான்
பெரிய கொத்தனன்,
காய்ந்து வருகிறது வற்றல்,
கரையான் அரிக்கிறது பழையபத்திரம்,

வெகு ஆண்டுகளாய் எறவானத்திலேயே தங்கிக்கிடக்கிறது செவப்பும்
மந்திரிச்சத் தாயத்தும்,
வெளியேப் பேத்துக்கொள்கிறது மனக்கட்டையின் ஆணி,

தடம்புரளுகிறது தலைச்சுமையில் புல்லுக்கட்டு வைத்திருக்கும் நங்கையின் கொசுவம்,

நெருப்பூட்டி கணக்கிறது பனம்பழம்,
மஞ்சலை மஞ்சமாய் கூட்டுகிறது சாயந்தரம்;

சமர் போல் எளிதாய்த் தொடங்கி முடிவில்லாமல் மாற்றம்
ஒன்றி மாறாமல் நிலைத்துத் தொடர்கிறதுப்
பேரன்பு.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 2:40 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 847

மேலே