தங்கச்சி

தங்கச்சி


எதையோ ஒன்ன பறிகொடுத்தத போல
இருக்கு தாயி
உன்ன வழியனுப்பயில
மனசசெல்லாம்
பொங்கி வழியிது
சந்தோ­சத்துலையும் கண்ணீராலையும்

வாக்கப்பட்டு போன தாயி
அண்ண மொறக்கி
என்னென்ன செஞ்சேன்னு
உனக்கு தெரியுமா ?

மாப்பிள்ளைக்கு
கை செயின் போட
காடெல்லாம் அலஞ்சேன்

கை விரல் மோதிரம் வாங்க
என் மேனி நோக உழைச்சேன்

கழத்துல செயின் போட
காடு கரைய வித்தேன்

காலுல மிஞ்சி போட
மிச்ச சொச்ச
சொத்தெல்லாம் எழுதி வச்சேன்

கல்யாண பத்திரிக்கையடிக்க
பைத்தியாமா திருஞ்சேன்

கந்துவட்டி வாங்கி
கஞ்சி காய்ச்சி வைச்சேன்

கலங்காம நீ இருக்கனு மின்னு
சம்மந்தி கால புடுச்சி விட்டேன்

மறுவீட்டு விருந்து வைக்க
மாடு ரெண்டையும் வித்தேன்

கறி சோறு ஆக்க
காசு இல்லாம தான்
கட்டவண்டிய வித்தேன்

தாயிமாமன் சீர் கொண்டு வரயிலதான்
சாதி சனம் இருக்கையில
வெரும் பயலுக்கு
வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமோன்னு கேக்கயில
சம்பந்தி யோட சொல்லு சாட்டையடியாய் இருந்துச்சு

கத்தி எடுத்து வெட்டுனாலும்
நிம்மதியா இருந்திருப்பேன்

ஊர்ல உள்ளவக முன்னாடி
தலைகுனிஞ்சி நிக்கயில தான்
தங்கத் பெத்தெடுத்த
தாயி முகம் பாத்தேன்
முகமெல்லாம் பூ போல
சந்தோசமா இருந்துச்சு

இன்னும் என்னென்ன செய்யனுமோ
எல்லாமே செய்வேன்
என் தாயி
நீ சந்தோசமா இருக்க..

ஸ்ரீவி. கிருஷ்ணா ஜெ

எழுதியவர் : ஸ்ரீவி. கிருஷ்ணா ஜெ (15-Feb-18, 3:04 pm)
Tanglish : thaNgkassi
பார்வை : 599

மேலே