ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ |
இடம் | : ஸ்ரீவில்லிபுத்தூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 3 |
ஏஞ்சலாக இருந்தலும்
ஏலியனாக இருந்தலும்
அவளை பார்த்ததுமே
மெய் மறந்து
பசி மறந்து
ஏன்
இந்த உலகத்தையே மறந்து
கவிஞனை மிஞ்சுமளவுக்கு
கவி படுவார்கள்
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
- ஸ்ரீவி.கிருஷ்ணா ஜெ.
இறந்து போன நான்
மீண்டும் பிறந்துவிட்டேன்
என்னை ஒரு உறவென நினைத்து
நீ
"அண்ணா"
என அழைக்கையில்.
- ஸ்ரீவி.கிருஷ்ணா ஜெ.
தங்கச்சி
எதையோ ஒன்ன பறிகொடுத்தத போல
இருக்கு தாயி
உன்ன வழியனுப்பயில
மனசசெல்லாம்
பொங்கி வழியிது
சந்தோசத்துலையும் கண்ணீராலையும்
வாக்கப்பட்டு போன தாயி
அண்ண மொறக்கி
என்னென்ன செஞ்சேன்னு
உனக்கு தெரியுமா ?
மாப்பிள்ளைக்கு
கை செயின் போட
காடெல்லாம் அலஞ்சேன்
கை விரல் மோதிரம் வாங்க
என் மேனி நோக உழைச்சேன்
கழத்துல செயின் போட
காடு கரைய வித்தேன்
காலுல மிஞ்சி போட
மிச்ச சொச்ச
சொத்தெல்லாம் எழுதி வச்சேன்
கல்யாண பத்திரிக்கையடிக்க
பைத்தியாமா திருஞ்சேன்
கந்துவட்டி வாங்கி
கஞ்சி காய்ச்சி வைச்சேன்
கலங்காம நீ இருக்கனு
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு....உன்மை வெல்ல வேண்டும்...
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
தூது
செந்தாமரை மலா் போன்ற மென்மையான மனம் கொண்ட என் தாய்க்கு
கடல் கடந்த நாட்டில் பௌா்ணமி வெளிச்சத்தில்
நான் எழுதும் கடிதம்
மலா்கின்ற பூமியில் தினம் மனம்தேடும் முதல் இடம் நீயே தாயே
உன் கையால் தினம் இளங்காலையில் கிடைக்கும்
தேநீரை பருக என் மனமிங்கு ஏங்குகின்றதே தாயே
என் குறும்புகளின் முடிவில்
உன் அன்பான கோபங்கள் கண்டிட விழிகள் தவிக்கின்றதே தாயே
தேநிலாவின் வருகையில் நீ ஊட்டும்
உன்னுடைய அறுசுவையான உணவினை உண்டிட ஏங்குகின்றன் தாயே
தென்றல் குளிரோடு நீ கூறும் கதை கேட்டு
உன் மடிமீது விழிமூட ஏங்குகின்றேன் தாயே
உண்மையான அன்பையும்
பரிசுத்தமான கருவரையும் தந்து
பத்து திங்கள் முழுமையாக காத்து
பத்தாவது திங்களிலே
கருவறைக்கும் மேல் பாதுக்காப்பான
தந்தையின் கையில் தந்து
உணவுடன் பாசத்தையும்
நற்பன்புகளையும் ஊட்டி
என்னை கண்களில் வைத்து வளர்த்த
என் அன்பு தாயே!!
இவர் பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
