மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 14

மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி -௧௪

மடலை படித்து முடித்ததும் மாலதியின் கண்கள் பர்ஹானாவை தேடியது ...

என்ன எழுதிருக்கு கொடு நான் படிச்சு பார்க்கிறேன் என சொல்லியவாறே பர்ஹானாவின் கை லெட்டரை பிடுங்க நீண்டதும்,தீயை தீண்டிய விரல்கள் அன்னிச்சையாக கையை இழுப்பது போல வெடுக்கென இழுத்து தன் ஸ்கூல் பேக்கில் வைத்து கொண்டாள் மாலதி...

சரி அப்போ நீ சொல்லு ,என்ன பண்ண போற,ஈவினிங் கார்த்திக் கிட்ட என்ன சொல்ல போற..
நீ அதை படிக்கும் போது உன் முகத்தை பார்த்தேன்..அதுல காதல் தெரிஞ்சதானு தெரியல பட் ஹேப்பி ஆஹ் பீல் பண்ணுன ...
பாருடா வெக்கத்தை இந்த பூனையும் பால் குடிக்குமா னு நினைக்கிற அளவுக்கு இருந்துகிட்டு ...
ம்ம் டுடே லவ்வர்ஸ் டே சோ இன்னைக்கு ஈவினிங் நீ கார்த்திக் கிட்ட சொல்லுறிய இல்ல உனக்கு பதிலா நான் சொல்லட்டுமா என சிரித்தாள் பர்ஹானா..
ஏய் அடிக்காதடி உன் சார்பாக நான் சொல்லட்டுமான்னு சொல்ல வந்தேண்டி....

மறுபுறம் ....
டேய் கார்த்திக் என்னடா டல் ஆஹ் இருக்க ..
என்னடா ஆச்சு, உடம்பு ஏதும் சரி இல்ல ஆஹ் ..
காலைல இருந்ததே ஒரு மாதிரி ஆஹ் இருக்க ..சொல்லுடா உன்னைத்தான் கேட்கிறேன் என்று சலீம் அவனை பிடித்து உலுக்கினான்..

கார்த்திக் நிமிர்ந்து பார்த்தான்...
அவன் முகம் சோகமாய் இருப்பதை புரிந்து கொண்டு,என்னடா மச்சான் எதா இருந்தாலும் என்னிடம் மறைக்க மாட்டேயே,சொல்லு என்னால முடிஞ்ச ஹெல்ப் ஆஹ் பண்ணுறேன்டா என்றான் சலீம் .....

சாரி மச்சி உன்னிடம் ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன்..
நான் மாலதியை லவ் பண்ணுறேன்..மார்னிங் தான் அத ஒரு கிரீட்டிங் கார்டுல எழுதி ப்ரொபோஸ் பண்ணலாம்னு பர்ஹானா கிட்ட கொடுத்து விட்டேன்..அதான் ஈவினிங் என்ன ரெஸ்பான்ஸ் வருமோனு கொஞ்சம் பயமாகவும் கவலையாகவும் இருக்கு...

டேய் என்னடா சொல்லுற இவ்ளோ நாள் ப்ரெண்ட் னு தான சொன்ன ..திடிர்னு லவ் லெட்டர் கொடுத்துட்டேன்னு சொல்லுற ..அதுவும் என்னிடம் கூட சொல்லாம..
இதுக்கு எதுகுக்குடா முகத்தை இப்படி வைச்சுக்கிட்டு இருக்க ...உனக்குலாம் இந்த அப்செட் மூஞ்சி செட்டே ஆகல..
விட்றா அதான் இன்னைக்குள்ள தெரிஞ்சுரும்ல பார்ப்போம்..
ஒரு அட்வைஸ் சொல்லுறேன் கேட்குறீயா என்றான் சலீம்...
ம்ம் நீயெல்லாம் அட்வொய்ஸ் சொல்லி கேட்கணும்னு இருக்கு மச்சி சொல்லு ,சொல்லி தொலை என்றான் கார்த்திக் ....
காதலுக்கிறது ...என சலீம் சொல்ல ஆரமிக்க,
டேய் நிறுத்து ஏதும் பஞ்ச் டயலாக் சொல்ல போறியோ என்றான் கார்த்திக் ..
சூப்பர்டா எப்படிடா கண்டு பிடிச்ச என கேட்டு சிரித்தான் சலீம்..
இததானடா காலகாலமா சொல்லிட்டு திரிறிங்க என்று கார்த்திக் முறைத்தான்...
நீயும் என்ன மாதிரி ஒருநாள் தலையை பிச்சுக்கிட்டு நிக்கத்தான் போற அப்போ தெரியும் என்னோட டென்ஷன் என சொல்லியவாறு எழுந்து சென்றான் கார்த்திக்...

ஹே மாலதி..இருடி எங்க எழுந்திருச்சு போற ..
திடிர்னு இப்படி சொல்லிட்டு போற உனக்கு என்ன லூசா பிடிச்சுருச்சு என்று கத்தினாள் பர்ஹானா..
இதுலாம் கொஞ்சம் ஓவர் டி ..பாவம் டி கார்த்திக் ...ரொம்ப பீல் பண்ணுவான்...
உங்களுக்குலாம் லவ் ஈஸியா கிடைக்க போய்த்தான் பசங்கள இப்படி சுத்தல்ல விடுறிங்க ..இதுக்கு கண்டிப்பா நீ பின்னாடி அவஸ்த்தை படத்தான் போற சொல்லிட்டேன் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்...

நில்லுடி நீ ஏன் அவனுக்கு ரொம்ப வக்காலத்து வாங்குற உனக்கு எவ்ளோ நாளா கார்த்திக் ஆஹ் தெரியும்..அதிகபட்சம் ஆறு மாசம் ...எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும்..
எனக்கும் அவனை பிடிக்கும் பட் அது காதல்தான் னு சொல்ல முடியல ..அவனுக்கு லவ் வந்த பீல் அவன் எப்படி பீல் பண்ணுறானோ ,அதே மாதிரி எனக்கும் தோனனும்ல....
அவன் இப்போ சொன்னதுக்காக ஏத்துக்கிட்டா,இன்னும் பிளஸ் டூ வேற இருக்கு..கொஞ்சம் விட்டு பிடிப்போம் ...
அவன் எப்படி ரியாக்ட் பண்ணுறான்னு தெரிஞ்சுக்கணும்..மறுபடியும் என்ன சுத்தி வரானா இல்லை கிடைக்கலன்னு மனச மாத்திக்கிட்டு வேற பெண்ணை ஏதும் பாக்குறானான்னு...அதுவும் லவ் ஆஹ் உடனே ஏத்துக்கிட்டா பசங்கள கைலயே பிடிக்க முடியாது ....
நீ ஏதும் அவனிடம் சொல்லிக்காத ...ஈவினிங் பஸ்ஸில வருவான்ல நான் பார்த்துகிறேன் என்று சொல்லி கண்ணடித்தாள் மாலதி...

என்னடா பஸ் வந்துருச்சு இன்னும் உன் ஆளை காணும் ..
ஒருவேளை உன் கண்ணுல படக்கூடாதுனு வேற பஸ்ஸில் போய்ட்டாளா..
இதுக்குத்தான் இந்த பொண்ணுங்களை லவ் பண்ணாதிங்கன்னு சொன்ன யாரு கேட்கா..அங்க பாரு நீ காலைல லெட்டர் கொடுத்துவிட்ட பர்ஹானா கூட வந்துருச்சு ..அத வாங்கி படிச்சு பதில் சொல்லுற உன் ஆளுக்கு மட்டும் தனியாய் ஏரோபிளைன்னா விட போறாங்க என டென்ஷன் ஆக்கினான் சலீம்..

கார்த்திக்கோ அவளை காணாது வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் ..
இதுவரை விழிகள் திறந்தால் மட்டுமே பார்க்க முடிந்த முகத்தை அவனுக்குள்
முதன்முதலாய் மெய் மறந்த கன பொழுதில் மூடிய இருட்டறைக்குள் ஒளியை விட பிரகாசமாய் மிக அன்யோன்யமாய் பார்த்தான் ..
அவள் தேவதைகளின் நகல் போல் இருந்தாள்.
இரண்டு கண்களுக்கு ஒற்றை கனவு என்பது இறைவனின் ஓரவஞ்சனையாய் இருக்குமென்று எண்ணுமளவிற்க்கு அவளின் பிம்பங்கள் அவனுக்குள் வியாபித்திருந்தது..
கற்பனைக்கு எட்டிய தொலைவுகள் வரை சென்று பார்த்து பிரமித்து போய் ,.
அவளை எப்படி வருணனை செய்வது என்று செய்வதறியாது திகைத்து நிற்கிறான்,
கால் பாதங்கள் தடயங்களை பதித்து மெல்லமாய் தன் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
அருகில் வரும் போதே பூக்களை கொலை செய்த தடயங்கள் அவள் மேனி எங்கும் நறுமணமாய் கமழ்ந்து சொர்க்கத்தின் வாடையை ஜாடையாய் காட்டுகிறாள்..
ராணுவ படையெடுப்பின் யுத்த காண்டங்கள் போல தன்னை அவளின் ஒற்றை பார்வை இதயத்தை சகட்டு மேனிக்கு சல்லடையாய் துளைத்து குருதி வழிந்தது....

தீடிரென கார்த்திக் காதருகே பஸ் எழுப்பிய ஒலி இவ்வளவு நேரம் கனவில் இருந்தவனை உலுக்கியது ..
சல்லடைபோல துளைக்க பட்டதாக நினைத்த உடலெல்லாம் வியர்வை துளிகள் வழிந்தோடியது..
டேய் அங்க பாரு என சலீம் கை காட்டிய திசையில் கண்ணை கசக்கியவாறு கார்த்திக் பார்த்தான் ..

மாலதியுடன் கை கோர்த்து சிரித்து பேசியபடி வந்த ஆளை பார்த்து நெஞ்சமெல்லாம் இதயம் முளைத்து ஒவ்வொன்றும் பயத்தில் தனி தனியாக துடிக்க ஆரம்பித்தது ....

திக் திக் திகில் நிமிடங்கள் தொடரும்.....

எழுதியவர் : (15-Feb-18, 7:34 pm)
பார்வை : 232

மேலே