அரசாங்கம்
பத்து தளம்கொண்ட
அந்த
பன்னாட்டுக்கம்பெனி
இயங்கும் வளாகத்தில்
தரைத்தளத்து
படிக்கட்டருகே இருக்கும்
பத்துக்குப்பத்து
அறையில் இருந்தபடி
மேலும்கீழும் செல்லும்
மின்தூக்கியை இயக்கும்
பெரியசாமியிடமும்....
அதேவளாகத்தின்
ஐந்தாவதுதளத்தில் இயங்கும்
அலுவலகத்தின் தரைக்கு
மாப் போட்டுக்கொண்டிருக்கும்
அவனது
மனைவியிடமும்.....
வீட்டில் இருவருக்கு
வேலையும்
குடியிருக்க வசதியான
வீடொன்றும் தருவதாய்
சொல்லித்தான்
அந்த இடத்தை
அபகரித்திருந்தது -
அரசாங்கம்.........!
அழ. இரஜினிகாந்தன்