ஆன்மீகத் திருடன்
வாடா கருந்தேளு கண்ணாயிரம். நீ இன்னிக்கு வசமா மாட்டிட்ட. உன்ன நாங்க தேடாத இடமில்ல. நீ இருபது பவுனு நகையைத் தூக்கிட்டு ஆறு மாசமா தலைமறவா இருந்திட்டு இப்ப மாட்டிகிட்ட. நட காவல் நிலையத்துக்கு.
😊😊😊😊😊
ஆய்வாளர் அய்யா. நான் தீவிர பக்தன். திருடப் போறதுக்கு முன்னாடி எங்க குலதெய்வத்தைக் கும்பிட்டுட்டுத்தான் போவேன். என்னோட பக்தி அப்பழுக்கற்ற தூய்மையான பக்தி. அந்த வகையில பாத்தா நான் ஆன்மீகத் திருடன். நான் விரும்பறது ஆன்மீக அரசியல்.
😊😊😊😊😊
அட திருடனுக்குக்கூட ஆன்மீகம் உண்டா?
😊😊😊😊😊
எல்லாருக்கும் உண்டு. எம் மேல கை வச்சீங்கனா நீங்க கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
😊😊😢😢😢
அப்பிடியா. அதையெல்லாம் அய்யா முன்னாடி பேசலாம். இப்ப ஏறு வண்டில.
😊😊😊😊😊
அய்யோ. அய்யோ. இது ஆன்மீகத்தை இழிவு படுத்தற செயல்.
😊😊😊😊😊
திருட்டுப் பயலே கண்ணாயிரம்: திருடனுக்குக்கூட ஆன்மீகமா? யோவ் ஏட்டு அவன் பொடனி மேல ரண்டு போடுய்யா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. போலிகளும் ஆன்மீகம் பேசும் காலம்