சிறகின்றி பறப்போம் வா

வானம் இருக்குது பரந்து விரிந்து
மனதின் பரப்போ அதைவிடப் பெரிது
கானம் பாடியே வானம் பாடியோவோம்
காற்றில் நீச்சலும் அடிப்போம் வாவா

எண்ணப் பறவைக்கு ரெக்கை முளைக்கட்டும்
தென்னை மரவுச்சி தொடலாம் வாவா
முன்னே வருத்திய எல்லா வலிகளும்
பயந்தே நடுங்கிட சிரிப்போம் வாவா

நட்புக் கனியிங்கு மாறாத விலையில்
நட்பின் அமுதமோ அதீத‌ சுவையில்
நட்பின் ஆட்டங்களோ சந்தோசம் கொடுக்கும்
மாறாக் காயங்களோ ஓட்டம் எடுக்கும்

குயிலையும் மயிலையும் கூட்டாளி ஆக்கி
ரயிலையும் முயலாகித் தாண்டுவோம் வாவா
வெயிலையும் கரம்கோர்த்து அழைத்துக் கொண்டு
தோட்டத்து பூவுக்கெல்லாம் தருவோம் செண்டு

சிறகெதுக்கு மனதிருக்கு ப‌றந்திடுவோம் வாவா
சிரித்தபடி லட்சியத்தை எட்டிடிவோம் வாவா
பறவைக்கும் பறப்பதற்கு கற்றுக்கொடுப்போம் வாவா
பெற்றஜெயத்தை பகிரிந்துருகி கொண்டாடுவோம் வாவா

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 9:30 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 196

மேலே