சுகம் தந்திடும் சுற்றாடல்

ஆத்தோரம் குளத்தோரம் வயலோரம் ஆடுவோம்
பாத்திக்கட்டி விதைவிதைச்சு அறுவடையும் செய்வோம்
சோறாக்கி கொழம்புவச்சு சாமிக்கும் படைப்போம்
ஆட்டம்முடியும் நேரத்துல வீட்டக்கொஞ்சம் நெனப்போம்

சடுசடு சடுகுடு ஆட்டம் கிள்ளித்தண்டா
குடுகுடு குடுகுடுவனெ ஓட்டம் தினம்நடக்கும்
விடுவிடு விடுவிடுவென அம்பாய் மரத்தில்ஏறி
பயமின்றி பாய்ஞ்சுதானே ஆத்தில் குதிப்போம்

கண்ணாமூச்சி நொண்டி ஆட்டம் திருடன்போலீஸ்
எண்ணிலடங்கா ஆட்டம்பாட்டம் தினம் தினமும்
காய்ச்சல் சளி உடல்வலினு எந்தநோயும்
தொட்டுக்கூட பார்த்ததில்லை எங்க உடம்ப‌

பம்பரமும் கோலிகுண்டும் நொறுங்கும் சத்தம்
சுத்துப்பட்டி அத்தனைக்கும் கேட்டும் கேட்கும்
புதரையெல்லாம் சீர்படுத்தி வழிகள் தேடி
புத்தம்புது அரண்மனைகள் தினம் கட்டுவோம்

பள்ளிக்கூடம் விடுமுறைனா மாலை வரைக்கும்
தண்ணி சோறு ரெண்டையும்தான் மறந்திடுவோம்
சொல்லித்தந்த பாடமெல்லாம் தினம் கனவில்
வந்துபோகும் பரிட்சைக்குத்தான் அதுவே போதும்

மரத்தடியில் வீசுகின்ற தென்றல் காற்றுகூட‌
விருப்பமான பாட்டுபாடி போட்டி போடும்
புத்துணர்ச்சி உடல்தெளிவு தினம் கிடைக்க‌
எத்தனைதான் வரங்கள் நாங்கள் பெற்றுவந்தோம்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 9:28 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 159

மேலே