போர்கொடியே

கொஞ்சம் கேள்வித்தீமூட்ட
கொழுந்து விட்டெரியுது
தீப்பிழம்பு ஆயிரம்
கேள்விக்குறியாக???????????

கள்ளிப்பால் நீத்துப்போக
காமத்துப்பால் காணவந்தாளோ???
கருவாய் கிழித்துக்கொண்டு
கதறியே வந்தாயே
இன்னும் தொடர்கிறதே
அவலச் சத்தம்!!!!

பெண்ணாக பிறந்தது
தவறல்ல அடிவேர்
கவ்வும் மண்ணாகப்
பிறந்ததுதான் தவறா?????

பகுத்தறிவு பட்டத்தின்
மாஜ்ஜாநூல் இயக்குபவன்
இயங்குதலில்............
கைக்கோர்த்துக் கொண்ட
கைப்பாவை பொம்மையாக!!!!!!

கட்டில்காண தொட்டில் கொள்
தொலைத்துவிடாதே கனவுகளை
மட்டும் இருட்டின் இச்சையில்!!!!
முன்னேறு முரண்பாடின்றி
அடங்கிப்போ ஆனால்
அடிமைப் பட்டுவிடாதே!!!!
தேடத்தொடங்கு தன்னறிவை
துளிர்விட்டெழும்பு தளிராக
தேய்ந்தொளியாதே துரும்பாக!!!!

கண்ணீருக்கா பஞ்சம்
கற்ப்புக்கரசிகளுக்கு ..இன்னும்
எத்தனை செய்திகளாக
கற்ப்பழிப்பு கற்ப்பழிப்பு
கற்ப்பழிப்பு கற்ப்பழிப்பு..........

சிதைந்த பிறப்புறுப்பின்
இரத்தப்போக்கு காரித்துப்புகிறது
கடுங் கோபத்தோடு!!!!!

சாத்திரம் சங்கமித்த
சகிப்பு பிரசவமாய்
சந்ததிகள் உருவாக்கும்
சக்திகளின் கற்பு நிலை!!!

இன்று பத்தினி சாபம்
சுட்டெரிக்க சுடுகாடும்
மிஞ்சுமா சூறையாட????????

காயத்துக்கு மருந்து வேண்டாம் காயமே வேண்டாம்!!!

இனியும் பொறுக்காதே
பாதுகாப்போடு தற்பாதுகாப்பும்
புதுப்பித்து பூப்பெய்து
போர்கொடியே!!!!

வேண்டா தொடுதலின்
தாசிமகன் தீண்டலை
கண்ணிய கற்ப்புத்தீமூட்டி
வெடித்துக்குமுறு வெகுண்டோட
பிணந்திண்ணிக் கூட்டம்....

ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (20-Feb-18, 6:35 pm)
பார்வை : 54

மேலே