அன்பு ஒற்றுமைக்கு மூலதனம்
இயற்கை வகுத்த
சாதிப் பிரிவு
குருதிக்குள் மட்டுமே
மனிதா குற்றம் உணர்!
தீண்டினால் தீட்டாகுவது
கதிரியக்கம் மட்டுமே
கரங்கள் அல்ல
கற்றுக்கொள்!
மரிக்க வேண்டியது
மதங்கள் தானேயன்றி
மனிதம் அல்ல
மனதில் வை!
எதிரெதிர் பொருட்களுக்கே
ஏற்றத் தாழ்வு - மனிதன்
என்பவன் ஓரினம்
ஒற்றுமைக் காப்பாற்று!
அன்பு மட்டுமே
உலகின் நடுநிலைப் புள்ளி
அன்பால் இணைந்திடு!
பிரிவினைக் கொண்டால்
போர்க்களமே முடிவாகும்
புரிந்துகொள்!!!