மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 18

# மூர்ச்சையற்ற பொழுதுகள் - ௧௮

மாலதி வெளிய என்ன பண்ணுற ..உள்ளே போ என்றவாறு அருகில் வந்தார் மாலதியின் அப்பா சங்கர்...
நீ யார் எதுக்கு இங்க நிக்குற ...உனக்கு என்ன வேணும் என அடுக்கடுக்காய் கேள்விகள் கார்த்திக்கை நோக்கி வந்தது..
இல்ல சார் காக்கா விழுந்துருச்சு ..கோழி குஞ்சு தூக்கிட்டு போயிருமுன்னு பயந்து கோழியை விரட்டலாம்னு ..என தத்தக்கா பித்தக்கானு உளற ஆரமித்தான் கார்த்திக் ..
மாலதி சப்தமாய் சிரிக்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் நின்று உதடோரம் பற்களை கடித்து தன்னை கட்டு படுத்தி கொண்டாள்..

அது இல்ல சார் தெருவுல வந்துகிட்டு இருந்தானா அப்போ ரெண்டு கோழி குஞ்சு வெளிய வந்துருச்சு அப்போ .....என கார்த்திக் சொல்லி கொண்டிருக்கும் போதே ..
நீ உள்ளே போ..என மாலதியை சொல்லிவிட்டு...
உனக்கு எந்த தெரு என கேட்டார்..
எனக்கு வடக்கு தெரு என கார்த்திக் சொல்ல...
அந்த தெருவுக்கும் இங்கயும் என்ன சம்பந்தம் ..இங்க எதுக்கு நிக்குற ..என கோபமானார் மாலதியின் அப்பா..
இல்ல சார் சும்மா வந்தேன் என இழுத்தான் ...
இனிமேல் இங்கலாம் வர கூடாது சரியா..இனிமேல் பார்த்தேன் அவ்ளோதான் என எச்சரித்து அனுப்பினார்....

சும்மா தெருவில நிக்க கூட உரிமை கிடையாதா என்னமோ இவங்க வீட்டு திண்ணையில நிக்குற மாதிரி கேட்குறாரு என பொருமிக்கொண்டே சென்றான் கார்த்திக் ....

+2 முதல் நாள்.
அவள் பார்த்து விட்டு சென்ற ஒற்றை பார்வையை நெஞ்சினுள் இரும்பு திரையிட்டு சேமித்து வைத்திருந்தான்..
விடுமுறை காலங்கள் இரண்டு திங்கள் முழுவதுமாய் மூச்சிரைக்க ஓடி களைத்திருந்தது.
அவளை மீண்டும் பழைய மாதிரி பார்க்க போகிறோம் என்ற எண்ணம் அவனுக்குள் 66 நாட்களாய் நடை பயணம் மேற்கொண்டு ,இன்றுதான் அவளை அடைந்திருந்தது..
அன்பை அள்ளி தருவாளா இல்லை அம்புகளால் கிள்ளி துளைத்தெடுப்பாளா என்றும் தெரியாது.
இரட்டை ஜடை பின்னல்களின் மேல் ஒரு வருடமாய் கண் சிமிட்டிய ரோஸ் கலர் ரிப்பன்களுக்கு பதிலாக வெள்ளை கலர் ரிப்பனால் சமாதனத்தை உணர்த்தும் வகையில் பறக்க விட்டுருந்தாள்.
தூரத்தில் நின்று பார்த்தான் நட்சத்திரம் போல மின்னிக்கொண்டிருந்தாள்..அருகில் வர வர பௌர்ணமி நிலவை போல ரொம்ப அழகாகவும்,நளினமாகவும் இருந்தாள்...
காற்றுடன் போட்டியிட்ட மேகங்கள் பரபரவென்று ஆகயம் முழுவதையும் ஒரே மூச்சில் சுற்றியது போல் இருந்தது,
இதயத்துக்குள் எக்ஸிமோக்களின் பனி வீடுகள் தற்காலிகமாய் டெண்ட் அடித்திருந்தது.
அவளை பார்த்த சந்தோஷத்தில் சப்தமிட்டு 143 சொல்ல இதயம் ஆயத்தமானது.
ஆனால் கூட்டத்தை கருத்தில் கொண்டு இதழ்கள் 144 தடை உத்தரவு போட்டிருந்தது.

அன்று பார்த்தது போலவே இரு ஜோடி கண்களும் இடைவெளியற்று நெருக்கத்தில் உரசி கொண்டது.
இமைகளில் மை'யிட்டு,
கருவிழியில் மெய்'யிட்டு,
இதழ்களில் பொய்'யிட்டு
மனமெங்கும் கற்பனையிட்டவளாய் அவன் முன் நின்றாள்..
இரண்டு மாதங்களில் எக்கச்சக்கமாய் அவளின் அழகு எகிறிருந்தது..
பேருந்து இன்று என்றும் போல் அல்லாது பெரும் கூட்டத்தை தூக்கி சுமந்து மூச்சிரைக்க ஓடி கொண்டிருந்தது ..
அவன் மூச்சும் வேகமாய் மூச்சுமுட்டி கொண்டிருந்தது.
சுற்றும் முற்றும் யாரும் அருகில் நெருங்க முடியாதவாறு கரங்களால் அவளை சுற்றி வேலியிட்டு அருகில் மிக நெருக்கமாய் தோளோடு தோள் நெருங்கி நின்றிருந்தான்...கூட்டம் கட்டுக்கடங்காமல் திமிறியதால் ஒருவரை ஒருவர் நெருக்கி உடல் ரீதியாய் அசவுகரிய படுத்திய போதும் அவள் மீது மட்டும் யாருடைய நிழலும் படாதவாறு நின்று கொண்டிருந்தான் கார்த்திக்....
அவள் தோழிகளில் சிலரும் அந்த கூட்டத்தில் அசௌகரியமாகவே நிற்கும்படி நிர்பந்தத்துக்குள்ளானார்கள்..
அதனால்தான் என்னவோ அருகில் நின்ற ஜெனிபர் ,மாலதியின் காதில் "உனக்கு பாதுகாப்புக்குலாம் ஆள் இருக்கு போல" என்று காதில் கிசுகிசுத்ததும்,
அவளின் வெட்கம் வெடித்து முகமெல்லாம் சிவந்து பரவியதை கார்த்திக்கால் கவனிக்க முடிந்தது..
அவன் அவளின் மிக மிக சமீபத்தில் நின்ற போதும் அவனின் சூடான மூச்சு காற்று அவளுக்கு சுவாசமாய் மாறியதே தவிர,அவளை ஒரு போதும் சுட்டெரிக்கவில்லை..
அவளின் அருகாமையை அவன் உணர்ந்து கொண்டதை போல அவளும் அவனின் அருகாமையை உணர்ந்திருந்தாள என தெரியாமல் இருப்பது வேதனையாய் இருந்தது..

எல்லோரும் இறங்க ஆயுத்தமானார்கள் பேருந்து தான் சுமந்து வந்த கூட்டத்தை இறக்கி விட்டு,வேறு பயணிகளை மீள் குடியேற்றம் செய்து கொண்டிருந்தது ..
அந்த நேரத்தில் அவள் அவனை கடந்து திரும்பி பார்க்காமலேயே விரூட்டென நகர்ந்து பள்ளி கூடத்துள் சென்றாள்..
கார்த்திக்கின் முகத்தில் சடாரென அனல் காற்று அறைந்தது போல இருந்தது.
ஒன்றும் புரியாமல் மன நெருடல்களுடன் ஐந்து நிமிடங்கள் அதே இடத்தில் கேட்பாறற்று நின்று கொண்டிருந்தான்..
மனசுக்குள் உருத்தல்கள் அவனை உருத்தெரியாமல் உருமாற்றம் செய்து கொண்டிருந்தது.
சிந்தையில் அவளின் செயல்கள் குழப்பத்தை குத்தகைக்கு விட்டிருந்தது.மன பாரத்தோடு அவளின் பள்ளி கூடத்தை பார்த்தாவாறு கடந்து செல்ல எத்தனித்த போதுதான் அவளை பார்த்தான் ...
கார்த்திக் வந்ததும் சின்னதாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு தேங்க்ஸ் என ஹஸ்கி வொய்ஸ்ல் சொன்னாள்... நெடுநேரமாய் அவனுக்காகவே காத்திருந்து உதிர்த்து சென்ற ஒரு வார்த்தையால் அவன் உள்ளம் உறைபனி மிகுந்த மலை உச்சியில் தானும் உறைந்து நின்றது போலிருந்தது..

மாலையில் மீண்டும் பேருந்தில் எல்லோரும் ஏறினர்...அவள் அவனின் தொலை தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்..
கார்த்திக் நிறுத்தத்தில் பஸ் யூடேர்ன் போட்டு திரும்பியது ..அதனால் மாலதியும் அதே நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தம்.,
அதுவரை மௌனமாய் நின்றவள் நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு எல்.எஸ்.எஸ் பஸ்ஸில் வா ஏழு மணி என்று" கார்த்திக்கு கேட்குமாறு அருகில் நின்ற பர்ஹானாவிடம் சொன்னாள்...
ஏய் நான் உன் பக்கத்துலதான் நிக்குறேன் எதுக்கு இப்படி ஊரே கேட்குமாறு சொல்லுற என திரும்பி பார்த்தாள் பர்ஹானா..
தூரத்தில் கார்த்திக் நின்று கொண்டிருந்தான் .அதானே பார்த்தேன் எலி எதுக்கு அம்மணமா போகுது என கிண்டலடித்தாள் மாலதியை..

அவளின் அழைப்பு கார்த்திக்கை நோக்கி இருந்ததாகவே நினைத்து கொள்ளுமாறு அவனது ஆறு அறிவும் அகிம்சை போராட்டம் செய்தது.
அவளின் அழைப்பின் பெயரிலேயே அதே பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தான்..
தன் காதலை சொல்லும் தருணமாய் மாற்றவும் விரும்பினான்..

நாளை நடக்க போகும் விபரீதம் தெரியாமல் ......

தொடரும் ......

எழுதியவர் : சையது சேக் (21-Feb-18, 5:46 pm)
பார்வை : 171

மேலே