மனோரமா நினைவு நாள் கவிதை

திரையுலக நடிப்பதனில்
நரை வராத நகைச்சுவைக்
கரைக் கண்ட ஆச்சியின்
மறைவுதனை நினைத்திடுவோம்..
பிறை நிலவே காணாமல் - தினம்
சிறை பிடிப்பார் முழுநிலவை நடிப்பில்
தலைமுறைகள் பல கண்டு
பல விருது மிக வென்று
சிலை கொண்டார் மக்கள்
மனமென்னும் பெருவெளியில்
கலையென்னும் வானில்
காலமதைக் காட்டும் துருவமவர்.
பகை மிகுந்த திரையுலகில்
நகைச்சுவையால் உலகை தன்
வயமாக்கி சிரிப்பூட்டியவர் - அதில்
பயம் என்பதறியா மாது ஆச்சி .
மனோரமாவாய்
மனங்களை ரம்மியமாக்கி
நனைத்து விட்டார் சிரிப்பு
தேனில்...நனி மகிழ்ந்தோம் நாம்.
சிறு குழந்தையாய் ஆனது போலொரு
மறுவுணர்வு நமக்குந்தான் உண்டாச்சு.
சிறுமுறுவலே சிறப்பாக்கும் உடலின்
சுறுசுறுப்பு மேன்மைதனை - ஓயாமல்
சிரிக்க வைத்து நம் குடும்ப
மருத்துவராய் ..நம்மில் ..
ஒருவராய் நம் ஆச்சி.

எழுதியவர் : (23-Feb-18, 9:22 am)
பார்வை : 942

மேலே