ஏன் அப்படி பார்க்கிறாய்
என் இதயத் தோல் கிழித்து உள்ளே பார்த்தாயா?
அருவருப்பாக என்னை நோக்குகிறது?
நான் யாரென்று அறிவாயோ?
நீ நினைப்பது போல் நான் அல்ல.
தனிமை பாதையில் தத்துவங்கள் உரைக்கும் இளைஞன் நான்.
இளமைக் காலம் வாழவே இல்லை.
சிந்தனையோ முதிர்ந்துவிட்டது.
அனுபவத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
உலகை நினைத்தும் இப்படித் தான் அது என்ற எண்ணமே தோன்றுகிறது, பல லட்ச ஆண்டுகள் உலகத்தோடு வாழ்ந்து உணர்ந்தவனைப் போல்.
கொப்புக்கு கொப்பு தாவும் மனித மனங்களே!
நோயைக் குணப்படுத்துங்கள்.
கொப்புகளெல்லாம் பலமானதாக, முறியாதவையாக இருப்பதில்லை.
இலைகளைப் போல் அவை உதிருகின்றன.
கட்டிக் கொண்டு காதலனென்று ஊர் பார்க்க முத்தமிட்டவள் திட்டிக் கொண்டே பிரிந்துவிட்டாள் அவளுடைய பெற்றோரே முக்கியமென்று.
காதலித்தவனோ கதறுகிறான்.
ஆதலால், இக்கொப்புகளென்ற உறவுகளெல்லாமே மிக பலவீனமானவை.
நிரந்தரமில்லாத மனித மனங்கள்.
அவற்றை உறவுகளாக நினைத்து வாழ்ந்தால் அவனே உலகில் சிறந்த முட்டாள்.
எனக்கு முட்டாளாக இருப்பதே பிடிக்கும்.
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல் இறைவனிடம் அன்பு காட்டுதலாகி உள்ளம் ஆனந்தமாகிறது..