மரணிக்கும் முன் உதிரும் வார்த்தைகள்

ஊனாடும் நிகழ்ச்சியில்
மனதாடும் மாந்தர்களே!
உயிரறுந்து வீழப்போகிறோம்...
அடுத்த ஊழ்வினை
உங்களுக்குத்தான்
உணர்ந்து கொள்ளுங்கள்!

நடிப்பின் பின்
நடைபோடும் இளைஞர்களே!
நாற்று நடக்கூட நாதியில்லை...
நாளைய சோற்றுக்கு
நஞ்சை உண்ணுங்கள்!

விவசாய முதுகெலும்பை
உடலில் தாங்கிய தேசமே!
விலா முறிந்தப்பின்...
விழா எடுத்துக் கொண்டாடுங்கள்
எங்கள் அழிவை!!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (23-Feb-18, 5:57 pm)
பார்வை : 1366

மேலே