போராடு மனமே போராடு

நிலையே இல்லா மனிதமனம்
அலை பாய்கிறது தினம் தினம்
கோடி கோடி முன் கொட்டினாலும்
போதாது என்கிறது உள் மனமே..

நடை மாற்றி உடை மாற்றி
நம் நாகரீகம் மறந்ததுவே
கர்வம் கொண்டு தலைக்கனம் கொண்டு
தரையில் அலைவது ஏன் சொல் மனமே..

அன்பு மறந்து அகிம்சை மறந்து
தன் வாழ்வின் வழிமறந்து
பெருமை கொண்டு பொறாமை கொண்டு
ஆட்டம் ஏனோ சொல் மனமே..

போராடு மனமே போராடு
உன் அடங்கா மனதோடு போராடு
நித்தம் நித்தம் போராடு
வாழ்வை சுத்தம் செய்ய போராடு..


எழுதியவர் : தோழி... (5-Aug-11, 9:10 pm)
சேர்த்தது : faheema
பார்வை : 676

மேலே