தேடல்
அன்னையின்
வயிற்றிலிருந்து
பிறப்பெடுக்கும் போதிலான
ஆரம்ப அழுகுரலே
அசலின் தேடல்தான்
"குவா என்றால் எங்கே"
அந்த தேடல் எல்லாம்
வாழ்வில் மறந்து விடுகிறது
பலரும் தேடாமலே
போய்விடுகிறார்கள்
ஞானம் என்பது
தேடலின் தொடர்ச்சிதான்
-----கவின் சாரலன்