நினைவுகள் நடக்கும் வானவில்
எழுத்து .காம்
இது
இணய தளம்
இனிய தளம்
இளைய தளம்
இமய தளம்
மின் பூக்கள்
பூத்துக் குலுங்கும்
இலக்கிய தோட்டம்
கவிஞர்கள் கைகோர்த்து
திரியும்
காவியப் பூங்கா
கனவுகளை சுமந்த
கற்பனையாளர்களின்
நினைவுகள் நடக்கும்
வானவில்.
---கவின் சாரலன்