நீ வருவாயென

மனசு உள்ளே அழுவதால்
என் அழுகை யாருக்கும் தெரியாது

நினைவுகள் உள்ளே வலிப்பதால்
என் வலி யாருக்கும் புரியாது

சிரித்துக் காெண்டே இருப்பதால்
கவலைகள் மறைக்கப்படுகிறது

தனிமையை காதலிப்பதால்
காதலன் பெயர் யாருக்கும் தெரியாது

காத்திருந்தே காலத்தை ஓட்டுவதால்
நாட்களின் நீளங்கள் மறந்து விட்டது

துயரங்களுக்கு முடிவில்லாததால்
மரணங்கள் தீர்ப்பெழுதுகிறது

எனக்குள்ளே எல்லாம் மறைக்கப்பட்டதால்
சாேகங்கள் யாருக்கும் தெரியாது

இல்லாததை இருப்பதாக நம்புவதாலும்
கிடைக்காததை கிடைக்கும் என நம்புவதாலும்

இதயம் காத்திருக்கிறது இன்னும்
நீ வருவாயென

எழுதியவர் : அபி றாெஸ்னி (25-Feb-18, 8:09 am)
Tanglish : nee varuvaayena
பார்வை : 541

மேலே