மலரவில்லை

"பசியை
தவிர
ஏதுமறியாதவன்
உணவை
திருடினானோ!
எது
திருட்டென
தெரியாததால்?
உல்லாசமாய்
வாழவாய்
திருடினான்?
உயிர்வாழத்தானே
திருடினான்!
உயிரெடுத்துவிட்டீரே
சற்றேனும்
இரக்கமிருந்திருந்தாலும்
இறந்திருக்கமாட்டானே
என்
தோழன்!
மாய்த்துவிட்டீரே
மானுடத்தை!
மலரவில்லை
மலையாள
தேசத்தில்
பொதுவுடமை"--

எழுதியவர் : இராஜசேகர் (25-Feb-18, 7:48 am)
பார்வை : 222

மேலே