தமிழ்
அழகிய மொழியே
ஆருயிர் தமிழே
இன்பத்தமிழே
ஈடில்லை உமக்கு
உயிரும் நீ தான்
ஊட்டி வளர்த்த மொழியே
எனது என்று உறவு கொண்டாடிட
ஏறிட்டு நிற்கும் தமிழே
ஐயமில்லை உம்மை கற்றால்
ஒவ்வொறு நாளும் உம்மை
ஓதியே வாழ்வேன்
ஔதடமாய் அமைந்த தமிழே
வாழிய வாழியவே !!!!