நெருநல் நிசப்தம்
அவன்: குறிஞ்சி கண்ட தொண்ணூற்றுண்பது மலரும்
உன் சிகை காண அவா கொள்ளுமடி.......
அவள்: உம் தலையாழி தருமமெனில்
ஒன்றேனும் சிகை காண செய்யுங்கள்
அவன்: உன் சிகை கண்ட மறுநொடி
மோட்சம் பெற்றதாய் இனமழியுமே!
அவள்: நித்தம் நினைவில் வாழும் என்னை காட்டிலும்
மோட்ச நிலை ஆராய்ச்சி தேவைதானா?
அவன்: ஒற்றை பூ சிகை கண்டால், ஏக்கத்தில்
மற்ற பூ மாண்டழியுமே! என்ன செய்வேன்!
அவள்: ஐவகை நிலத்தை நினைவில் கொள்ளும் தாங்கள்
ஆருயிரே நினைவில் கொள்ளாததேனோ?
அவன்: நீண்ட சிகையே பாரமுனக்கு!
மென்மேலும் பாராமெதற்கு?
அவள்: உம் உலகம் சுமக்கும் தமிழச்சி
பூ தாங்க மாட்டாளா?
அவன்: அழகு கண்டு ரம்பைகள்,
ஆகாயம் துறந்து வந்தால் என்ன செய்வது?
அவள்: ஆசை வேண்டாம்.
உமை கண்கட்டி புறம் தள்ளி
தலையாழி விருந்தளித்து வெற்றிலை மடித்தனுப்புவேன்.
கவலை வேண்டாம்.......
அவன்: குஜராத்தில வாழைப்பூ கூட கிடைக்காதே
என்ன பண்றது?
அவள்: அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு
கவிதை சொல்றேள்.......
துணிய தொவைங்க..........
அவன்: நிசப்தம் .........