தமிழ் உணர்வு தமிழர்களின் உள்ளத்தில் வேண்டும்
ஈழத்தில் என் தாய்
என் பிள்ளை
துடிதுடித்து இறக்கும் பொழுது
நான் என்ன செய்தேன்
ஒன்றும் செய்யவில்லை...
பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன்..
என் மழலை
இறப்பதை
மூன்றாவது நபர் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்னால்
அதிகபட்சமாக அழத்தான் முடிந்தது....
அழுதுகொண்டே இருந்தேன்...
இன்னும் அழுதுகொண்டு தான் இருக்கிறேன்....
இந்தியாவின் கீழ்
அடிமையாக இருக்கும் என்னால்
என் பிள்ளைய காப்பாத்த முடியலைங்க....
அடிமையான இந்த தாயால
என் பிள்ளைய காப்பாத்த முடியல...
என் பிள்ளைய நான் தாங்க கொன்னன்...
என்னையே நம்பி இருந்த என் பிள்ளைய நான் தாங்க கொன்னன்..........
நான் தான் கொன்னன்....
என் பிள்ளை சாக
நான் மட்டும் இன்னும் உயிரோடு இருக்கன்னே...
என் மகளே என் தாயே
அம்மா...
உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறன்டா...
எந்த மன்னிப்பும் என் பாவத்த போக்காதுடா...
செத்து போன நீ உயிரோட வந்துடுவியாடா...
அம்மு
உன் காலடியிலயே செத்து போகணும் டா...
என் தாய்த்தேசத்தில் என் பிள்ளையை
அந்நியரான இந்தியருக்கும் அவர்களின் வழித் தோன்றலான சிங்களவருக்கும்
வாரி கொடுத்துவிட்டு
வாய்க்கரிசி போட்டவள்
உணர்வு மிக்க தமிழர்களாக வாழுங்கள்
என் தமிழ் இனமே...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து