வேண்டுதலும், வரமும்

#நிலை_கூறி_வேண்டல்: - அண்ணன்மார்களும், தம்பிமார்களும் ஒருவரை ஒருவர் தாக்கி இரத்தம் சிந்திக் கொண்டிருக்க, நான் எவ்வாறு புன்னகை சிந்தி பொழுதைப் போக்குவேன்?

கண்கள் சிவக்கிறது,
உன்னால் என்ன செய்ய முடியும்?
உண்மை கன்னத்தில் அறைகிறது.
போதையில் தள்ளாடும் நாகரீக மேடையில் கொடிப் பிடித்துக் கோஷமிடும் சுயநலக்கூட்டமே அதிகம்.
அதன் சூழ்ச்சி வீழ்ந்தவரே அதிகம்..

கருணையுடைய திருவடியிடம் அருள் கேட்கிறேன்.
சூழ்ச்சி அழிந்து ஒற்றுமை ஓங்க அருள் தா, அருள் தா என்று சிந்தையில் வேண்டாத நாளில்லை இறைவா...

#தைரியம்_தந்தருளல்:-
இரத்தம் கொதித்து அடங்கும் முன்னே அடங்கிப் போகும் வாழ்க்கையடா.
அதில் அடிதடி, உனது, எனது என்று பிரிவினை எதுக்கடா..
சுற்றியிலும் நெருப்படா.
அதன் மத்தியிலே நீ நிற்கையில் புரியுமடா..
வேதனை எதற்கடா.
இந்த வாழ்வே பெரும் சொதனை நிறைந்ததடா...
அச்சொதனை தாண்டுகையிலே நீ சாதனை படைக்கிறாயடா தம்பி...
நீ சாதனை படைக்கிறாயடா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Feb-18, 10:29 pm)
பார்வை : 4270

மேலே