நெஞ்சுக் கூடுகள்
நெஞ்சுக் கூடுகள்
தாயின் தாலாட்டில்
தவழ்ந்த நாட்கள்...
தன்னந்தனியாக
தனிமையில்
தாலாட்டிக் கொண்ட
நாட்கள்...
வட்டவட்ட நினைவுகளாக.
சிற்றோடைகளில்
சின்னஞ்சிறு
மீன்குட்டிகளை
கண்டு குதூகலித்த
பொழுதுகள்...
புலர் குளிர் விழிப்புகளில்
தகத்தகாய
சூரியத்தட்டில்
குளித்து
சூடேற்றிய
கணங்கள்
மென் நினைவுகளாக
எப்போதோ ஒரு முறை
வந்து போகும்.
தாயின் கணப்பு
மட்டும்
இன்னமும்
நெஞ்சுக்கூட்டில்
அதே சூட்டில்.
- சாமி எழிலன்