பெண்கள்
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பது உண்மை தான்,
உன் மங்கள முகமும், தாயுள்ளமும்
கண்டு எனது காமப் பேய் எனைவிட்டு இறங்கி விட்டது★
பெண் புத்தி பின் புத்தி என்பது உண்மை தான்,
என் புத்தி செயல் படாத போது
என் பின் புத்தியாக இருந்து முன் செல்ல வைப்பது நீதானே★
பொம்பிளை சிரிச்சா போச்சு என்பது
உண்மைதான்,
நான் துவண்ட போதிலெல்லாம் நீ
எனை அணைத்து பரிவாக சிரிச்சா
என் கவலையெல்லாம் போச்சு★🌷🌷