மழலைக்கு ஒரு கவிதை


வானவில் ஓன்று
பனிச் சரிவில்
வழுகி வந்தது போல்
அந்த மழலைச் சிட்டு
ஓடி வந்து
என் கழுத்தைக் கட்டிக்கொண்டபோது
சின்ன வழிகளும்
சிரிக்கும் உதடும்
ஆப்பிள் கன்னமும்
பிஞ்சு விரல்களும்
என் மனப் புத்தத்தைப்
பிரித்துப் பார்த்தன

உனக்கின்றி
இனி யாருக்கு நான்
கவிதை எழுத் வேண்டும் ?
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-11, 10:12 am)
பார்வை : 492

மேலே