உன்னதபடைப்பு

இறைவன் உன்னதபடைப்பில்
இவர்களும் ஒருபடைப்பு
இவர்களுக்குமட்டும் இல்லை
இவ்வுலகில் நல்கவணிப்பு

ஆணின்குணம் பாதி
பெண்ணின்குணம் மீதி
இட‌ஒதுக்கீடு சரிபாதி
இல்லாமல்போனதடி பாவி

அழகில் ரம்பை
அறிவில் மேதை
அன்பில் தெரசா
அடக்கத்தில் புதியகீதை

மனமுவந்து சொன்னால்
மண்ணும் பொன்னாகும்
மனம்நோகி சபித்தால்
மாளிகையும் மக்கிப்போகும்

ஜீன்களின் மாற்றம்
இவர்களது தோற்றம்
பணியில்லாதது ஏமாற்றம்
பணிகொடுக்காதது வருத்தம் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (1-Mar-18, 6:51 am)
பார்வை : 120

மேலே