♡ராசவே உன்ன நம்பி♡ பகுதி - 06

♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 06

ராஜ் அம்மா : "அம்மா திவ்யா"
திவ்யா : (மெதுவான தொணியில்) "அத்த...!! ராஜ்...ராஜ்..." என்று முனங்கினாள்.
ராஜ் அப்பா : "திவ்யா என்னம்மா..!!! பாரும்மா...!! நம்ம ராஜ...!! அவ இருக்கிர நிலமய...!! சின்ன அசைவுக்கூட இல்லம்மா'' என்று அழுதார்.

திவ்யா : (கண்ணீருடன்) "மாமா என்னாச்சிமா ராஜிக்கு"
ராஜின் அப்பா : "நம்ப ராஜ் கோமாக்கு பொய்ட்டாம்மா..!!😢😢 டாக்டர் கை விரிச்சிட்டாரு...! கடவுளதான் நம்பி இருக்கோம்"

திவ்யா அதிர்ச்சியில் மயக்கமடைந்தாள் உடனே டாக்டரை அழைத்தார் ராஜின் அப்பா.
"சின்ன மயக்கம்தான் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்" என்றார் டாக்டர்.
ராஜ் அப்பா : "டாக்டர் மற்ற டாக்டர் எங்க?"
டாக்டர் : "அவரு நைட் டுயிட்டிக்குதான் வருவாரு"

ராஜின் அப்பா மனைவியை வைத்தியசாலையில் விட்டு விட்டு அந்த சாமியாரின் முகவரிக்கு போனார். சாமியாரும் இருந்தார்.
ராஜ் அப்பா : "உள்ளே வரலாமா சாமி"
சாமி : "வாங்க உட்காருங்க"
சாமியாருக்கு முன்னால் உட்கார்ந்தார்.
சாமியார் : "சொல்லுங்க என்ன விஷயம்"
ராஜின் அப்பா நடந்தவற்றை கூறினார்.
சாமியார் : "நான் நாளைக்கு உங்க வீட்டிற்கு வாரன் உங்க பையனையும் மருமகளையும் வீட்டிற்கு கூட்டி வந்துடுங்க"
ராஜ் அப்பா : "ஏன் சாமி?"
சாமியார் : "அவங்க இருந்தால்தான் அத வேகமா என்னட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்"
ராஜ் அப்பா : "சரி டாக்டர்" என்று சொல்லி விட்டு வைத்தியசாலைக்குச் சென்றார்.

அங்கே திவ்யா மீண்டும் கண் விழித்து இருந்தாள். டாக்டரிடம் சொல்லி விட்டு இருவரையும் வீட்டிற்குச் கூட்டி சென்றனர். திவ்யாக்கு வீல் செயார் கொடுக்கப்பட்டது.
வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது
ராஜின் அப்பா : "எப்படிமா எக்ஸிடன்ட் நடந்துச்சி ராஜ்தான் நல்லா வண்டி ஓட்டுவானே"
திவ்யா : "ஆமா மாமா" என்று வாகனத்தில் நடந்தவற்றை கூறினாள்.
ராஜின் அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ராஜின் அம்மா பயத்தில் நடுங்கினாள்.
ராஜின் அப்பா திவ்யாக்கு தெரியாமல் மனைவியின் கையை பிடித்து அமைதியாக இருக்க சொன்னார்.
வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இருவரையும் அறையில் படுக்க வைத்தனர் அந்த சமயம் சாமியாரும் அவரோடு மூவரும் வந்தனர். திவ்யா ராஜை பார்த்தப்படி அழுது கொண்டே உறங்கி விட்டாள் கட்டிலுக்கு அருகில் வீல் செயாரை வைத்துக்கொண்டு.

சாமியார் அவர்களின் அறையை மூடச்சொன்னார். ராஜின் அப்பா அவர்களின் அறையின் கதவையை மூடினார். சாமியாரும் அவரோடு வந்த மூவரும் ஓரிடத்தில் அமர்ந்து மந்திரம் ஓத ஆரம்பித்தார்கள். ராஜின் அம்மாவும் அப்பாவும் அப்பாவும் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

சாமியாரின் மந்திரத்தின் சக்தியால் அந்த கருப்பு உருவம் இருந்த மரம் காற்றினால் வேகமாக ஆடத்தொடங்க மரத்தருகில் உள்ள மணல் துகள் தூசிகள் வீச ஆரம்பித்தன. அப்படியே சாமியார் மந்திரம் ஓத சாமியாருக்கு கட்டுப்பட்டு அவரின் முன்னால் தோன்றியது அந்த கறுப்பு உருவம்.

தொடரும்.......

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (1-Mar-18, 9:31 am)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
பார்வை : 295

மேலே