காதல்
வசந்த நிலவின் பொன்முகம்
அவள் முகம் , அந்த நிலவின்
ஒளியில் நான் மயங்க
அவள் கைகளின் மென் விரல்கள்
யாழ்மீட்டும் இன்பம் தந்தது
என் மார்பை அவள் மெல்ல நெருட
அவள் அடக்க பேச்சின் இனிமை
கொஞ்சும் குயில் பாட்டாய்
என் காதில் ஒலிக்க-தாலாட்ட
வந்தது அவள் கால்கள் சலங்கை,
அவளை அறியாமல் எழுப்பும்
மெல்லிய தாள நாதமது
இப்படி மலரின் மதுவுக்கு
மயங்கிய வண்டாய் அவள்
மடியில் தலை வைத்து நான் இருக்க
தென்றலாய் அவள் கைகள் வந்து
துயில்நின்று என்னை எழுப்பியதே
இப்படியே இதற்குள் நீ உறங்கிவிட்டால்
போகும் இடம் வெகு தூரம்
நம் காதல் பயணத்தில் என்றாள்
நானும் அவள் சுப்ரபாதத்தில்
விழுத்துக் கொண்டேன் இன்னும்
காதல் இன்பம் பருகிட எந்தன்
விரக தாகம் தீர்ந்திட
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
