விரைவில் வருவேன்🌷

[இரை தேடி ஊர் சென்றபறவை யாக நான்]
ஒருகணவனின் பிரிவின்பரிதவிப்பு
________ __________ ________ __________
நான் வேறு ஊருக்கு தான் போயிருக்கிறேன்,இப் பாருக்குள்ளே தான் பரிதவித்து கிடக்கிறேன்,நாவால் என் உடல் துலக்கி உயிர் குடிக்கும் நேரம் வாய்க்காது நீயும், சூலை நோவால்
துயர் கொண்டு இடையில் உடை
இறுக்காமலிராதே,கை வளையும் நிலம் விழ நோக்கி நில்லாதே,
மயிலிறகாய் வருடும் மன்மதக் கணை மன பாரமாய் ஆனதே என கலங்காதே, நாம் கலந்து கட்டிய இன்ப கோட்டைதனை நினைவு கொள், நீ அதில் கொஞ்சம் மறந்தாலும்,அந்த பலகணி காற்று பல கதை பகரும் கேள், இங்கே என் கண் பாரத்த அதே நிலா அங்குனக்கு
என் பிம்பம் காட்டும் பார்,
உன் மூச்சு காற்று என் ஊர் காற்றில்
கலந்து தகிக்க, என் மூச்சு காற்று
உன் ஊரில் உனக்கு வாடைக் காற்றாய் வதைக்க,
சகித்து கொள்வோம் சகியே!
பிரிவென்பது நம் உடலுக்கு மட்டுமே,
உயிருக்கல்ல, பயணத்தின் ஜன்னல் வழி காட்சிகளாய் காலமது கடந்து விடும், நேரமது கூடி வரும், என் இதழோர மது நாடி வரும்,(அப்போது)
உன்னுடல் என்னுயிர், என்னுடல் உன்னுயிர் கலந்து அன்பெனும் பயிர் வளர்ப்போம்,பாஉம் பண்ணும் கலந்து நாதமாய் காதல் ஒலிப்போம்.🌷
🙏 இது என் இருநூறாவது கவிதை, கருத்துரைத்தவர் ,வாசித்தவர் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி🙏

எழுதியவர் : பாலமுருகன்பாபு (2-Mar-18, 9:18 pm)
பார்வை : 183

மேலே