நட்பின் அகராதி

கடற்கரையின்
ஈர காற்றுக்கு தெரியும்
நாம் இருவரும்
நண்பர்கள் என்று

அங்கே மணலில்
ஓடி விளையாடும்
நண்டு குஞ்சுகளுக்கு
தெரியும் நம் பாதசுவடுகள்
எல்லாம் நட்பின்
பாதசுவடுகள் என்று

அங்கே சுற்றித்திரியும்
காதல் ஜோடிகளின்
அகராதியில்
நம் தூய நட்பிற்கு
என்ன அர்த்தமோ...?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Mar-18, 7:40 pm)
Tanglish : natpin akarathi
பார்வை : 540

சிறந்த கவிதைகள்

மேலே