உனை சேரா கடிதங்களில் என் காதல்

நிலவொன்றே அழகென்றிருந்தேன் காலைக் கதிரவன் காணா வரை,
தனித்து நின்றே வாழ்வினை கொண்டேன்,
நெஞ்சை காதல் களவு கொள்ளா வரை,
முகில் மறைத்த நிலவதனை காண்கையிலே
நாணத்தில் கரம் புதைத்த பெண் விழி தோன்றுதடி,
துச்சமென தூக்கி எரிகையிலே -
காதல் உள்துளைத்து உயிருள் கூடுதடி,
வேதம் என்றே நான் படிக்க வெட்கம் அதை நீ அடைந்தாய்,
சொற்கள் அற்றே நான் திகைக்க கண்கள் கொண்டே கவி படைத்தாய்,
ஐம் பொறியில் நாவொன்றே பொய்யுறையும் என்றிருந்தேன், உனை பிரிந்த நொடி தொட்டு,
ஒலிப் புகும் காதில் இசையென, ஓலமிடும் நாவின் மொழியென, நெஞ்சில் களியேற்றும் உணர்வென, ஆத்ம தீயின் சுவாசமென, காணும் காட்சிகள் யாவுமே நீயென, ஐம் பொறியும் பொய்யுறைத்தே
எனுள் இன்ப தீயினை ஊட்டுதடி........
. சே கிருஷ்ணா

எழுதியவர் : கிருஷ்ண மூர்த்தி (5-Mar-18, 11:10 am)
சேர்த்தது : Krishnamoorthi
பார்வை : 135

மேலே