என் அருமை நண்பனே

அன்பான தோழனே
அருமையான நண்பனே
உயிர் மூச்சாய் இருப்பவனே
வெயிலுக்கு குடை பிடிப்பவனே
மழைக்கு சல்லடையாய் மாறுபவனே
பறவைகளின் அடைக்கலமாய் விளங்குபவனே
என் அருமை நண்பா!
என் வீட்டு தோட்டத்தில்
எனக்கு பின் பிறந்து
எனக்கு முன் வளர்ந்தவனே
உறங்க தொட்டில் கொடுத்தவனே
விளையாட உன் கிளைகள் கொடுத்தவனே
பசியாற உன் கனிகள் கொடுத்தவனே
என்றும் நீ வளமாக,
உன் பசுமை குன்றாமல்,
மனித ஆசையால் அழிந்து விடாமல்,
நல் வாழ்வு வாழ,
என் சுயநலம் இல்லா இயற்கை நண்பா!
உனக்காய் பிரார்த்திக்கிறேன்.

எழுதியவர் : கலைப்பிரியை (6-Mar-18, 4:31 pm)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : en arumai nanbane
பார்வை : 140

மேலே