பெண்ணே உனக்காக

பெண்ணே உனக்காக!

மனதில் மிடுக்குடையாள்..
தன்னில் தணலுடையாள்!
நேரிய செருக்குடையாள்..
நெஞ்சில் பயிர்ப்புடையாள்!
பண்பாய் பகிர்ந்திடுவாள்!
அன்பால் அணைத்திடுவாள்..
உணர்வால் ஈர்த்திடுவாள்!
தானத்திற்கே தாரைவார்த்திடுவாள்!
நிதானத்திற்கு பெருமை சேர்த்திடுவாள்!
அவள் அப்படித் தான்!!

*-*-*-*-*-*--*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-*--**-*-*-*

பெண்,
வர்ணிக்கப்படும் 'பொருள்'!!
பார் போற்றும் பேதை என்றார்,
மென்மை தழுவும் பதுமை என்றார்,
தேன் சிந்தும் பூவை என்றார்,
மனம் மயக்கும் மது குவளை என்றார்..
...
தகர்த்து உடைத்திடு..
உன்னை மலர் என்றார்!
தீங்கிழைக்கும் முள் என்றார்!
மடவன்..
நீயே ஆதி..
நீயே அந்தம்..
நீயே அணு..
நீயே ஆணி வேர்..
உனக்கு நிகர் வேறு ஒன்றுமில்லை பரம்பொருளே!

*-*-*-*-*-*--*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-*--*-*-*--*-*

தாயே!
தாழ்ந்து விடாதே..
தளர்ந்து விடாதே..
ஒரு முறையேனும்
உன் வேதனையை
உமிழ்ந்து விடு..
நீ சுமக்கும் பாரம்
ஏந்திக் கொள்ள
புவியியல் வழியேதுமில்லை..
உனக்கவும் வாழ கற்றுக் கொள்ள..
ஆதவன்,
அவன் அநேகன்..
நீ அவனுக்கு
தாமரையாக மலர்வாயோ?
இல்லை
அல்லியாக மலர்வாயோ?
உனக்கான அளவு கோளை
நீயே நேர்த்திக் கொள்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (6-Mar-18, 7:18 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : penne unakaaga
பார்வை : 2874

மேலே