எங்கும் நீ எதிலும் நீ ❣

என் இதயக் குளம் நீந்தும் கயல் நீ,
என் வானம் மின்னும் விண் மீன் நீ,
என் வீட்டு ஜன்னலின் தென்றல் நீ,
என் உயிர் தடாகம் பூத்த தாமரை நீ,
என் வீட்டு மேற்கூரை இரவு நிலவு நீ,
என் கனவு காட்சிகளின் உண்மை நீ,
என் நுரையீரல்தீண்டும் உயிர்மூச்சுநீ
என் விரல் தீண்டாத புது சொர்க்கம் நீ
என் மன தோட்டம் விழும் மழைநீர் நீ,
என்றும் நீ, எதிலும் நீ, எங்கும் நீ,
என் அங்கமும் நீயான பசுந் தங்கம் நீ,

எழுதியவர் : பாலமுருகன்பாபு (6-Mar-18, 9:23 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 411

மேலே