கலைகள்

அபிநயங்கள் அரங்கேற்றப்படும் மேடைகளில்,
அழிந்து போன கலாச்சார மிச்சங்கள் எச்சங்களாய்..!
நவீன கலைகள் தான்தோன்றிப்பறவையாய் உலவ..!
சிட்டுக்குருவியாய் என் தமிழ்க்கலைகள்...
தொலைதூர அலைவரிசையில்.!
சிதைந்த சிட்டுக்குருவிக்கு "பொழுது வணங்கி" மலர்களுடன்
சின்னஞ்சிறு கல்லறைக் கடிதம்..!
பட்டுப்போன காவியக்கலைக்கு,
நவீன எழுதுகோலில் மரணமடல்..!
விழியோரக் கண்ணீரின் ஒற்றைத்துளியில் உதித்து நின்ற
உரத்துப் போன உள்ளுணர்வுகள் அவை..!

எழுதியவர் : சரண்யா (6-Mar-18, 11:47 pm)
பார்வை : 178

மேலே