ராணியின் மரவட்டை
என்றோ எழுதிய
பழங்கவிதையொன்றை
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
விட்டுப்போன சொற்களால்
மூளைக்குள் சுருண்டது
மரவட்டை பூச்சியாய்...
வார்த்தைகள் தெரிந்தால்
கவிதை புரியவில்லை.
கவிதையை அறிந்தால்
அர்த்தம் தெளியவில்லை.
சதுரங்க ராணி
குதிரையாகி - ராஜனை
துரத்தும் முரண் அவலம்.
நடுப்பகலில் அணையாது
எரியும் தெருவிளக்கு...
எந்த ஒளியில்
தேடுவேன் நான்
அக்கவிதையின் மிச்சம்.