தாவணிப் பெண்கள்

வயதுக்கு வந்து விட்டாள் தேவதை என்று
ஊர் கூடி சடங்கு செய்து பெரியவளாக்கி விட
அழகுக்கு ஆசை காெள்ளும் அவள் மனசு
ஏதேதாே செய்து அலங்கரித்து
தாவணி அழகை மறந்து பாேய் விட
காதல் வந்து அவள் மனம் மாறி விடும்
அவசர கலியாணம் ஆடம்பரமாய் நடக்கும்
புகுந்த வீட்டின் புது வாழ்க்கை கசக்கும்
ஆறு மாதம் முடிவதற்குள் ஆயிரம் காரணம்
உறவு அறுந்து பாேக பிறந்த வீடு தேடி
விவாகரத்தாேடாே, விதவையாகவாே
இல்லை அனாதையாகவாே
வருகிறார்கள் பெண்கள்,
தாவணிப் பெண்களை எல்லாம் அவசரப் புடவையாக்கி
கலியாண பந்தத்தில் அவசரமாய் கட்டி வைக்காதீர்
சம்பிரதாயம், கலாச்சாரம் என்று
தாலியால் வேலி பாேட்டு
கனவுகளை சிதைக்காதீர்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (7-Mar-18, 10:00 am)
பார்வை : 499

மேலே