ஈவேரா பெரியார் இவர்
ஈவேரா பெரியார் இவர்!
ஈவேரா பெரியார் இவர்!
எண்ணற்ற விந்தைகள் செய்திட்டார் இவர்!
புண்ணுற்று புரையோடி பொய் புகட்டாய் மூடதனத்தின்
முழு உருவாய் கீழ்கிடந்த மூட சமுதாயத்தை
அறிவு கொண்டு, பகுத்தறிவு கொண்டு
பதட்டமின்றி களை எடுத்தார்!
ஈவேரா பெரியார் இவர்!
மதப்புறட்டும் சாதிக்கொடுமைகளும்
ஆழவேர்விட்டு ஆளைக்கொள்ளும்
அதி ராட்சகன்களாய் உயர்ந்தபோதே
சிங்கக் குறலிட்டு சிறுத்தையாய் எழுந்திட்டார்.
செய்திட்டார் அறிவு பிரச்சாரம்
அனைத்திட்டார் மக்கள் அனைவரையும்
அறிவுப் பாசறையின் கழகத்திற்கே.
திரண்டிட்டார், மக்கள் திரண்டிட்டார்
இந்த நவீன நாயகனின் நாத்திகப் பிரச்சாரம் கண்டே.
உணர்ந்திட்டார் பல்லாயிரமாண்டாய்
தம்மை அடக்கிட்ட அறிவில்லா
மதத்தலைவரையும் அவர்தம்
புனைசுருட்டு புழுகுகளையும்.
ஈவேரா பெரியார் இவர்!
பெண்ணிற்கு விடுதலையும்
விதவைக்கு மணக்கோலமும்
கனவிலும் எட்டாத கனவாக வைத்திருந்த
பெண்ணடிமை சமுதாயத்தை
பெண்களை கொண்டே உடைத்தெரிந்தார் இவர்.
பகுத்தறிவு திருமணத்தோடு
அனைவருக்கும் நற்கல்வி வேண்டி நின்ற இவர்
அனைவருக்கும் சுயமரியாதை
சுத்தமாய் ஆக்கிட பாதை அமைத்திட்டார்
ஈவேரா பெரியார் இவர்!
நினைக்கவில்லை இவர் பதவி சுகம்
இவர் நினைத்தெல்லாம் மக்கள் யுகம்
பகுத்தறிவு மக்கள் யுகம்.
பொன்னுலகம் காண 'இனி வரும் உலகம்' எழுதிட்டார்.
உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழி
தழைத்து நின்றிடவே எழுத்து சீர்திருத்தம் கண்டிட்டார்.
ஒழுக்கத்தின் உச்சமாய், உண்ணதத்தின் எடுத்துக்காட்டய்
ஒழுக்க சீலராய் வழ்ந்திட்டார் இவர்.
ஈவேரா பெரியார் இவர்!
தமிழர்தம் இனம் கெடுக்க வந்திட்ட
குலக்கல்வியை கொதித்தெழுந்தே முடித்திட்டார்
தமிழர்தம் கண்திறந்திட்டார்.
'நல்ல காமராசுடனே' இனைந்து எல்லோர்க்கும்
கல்விக்கு வித்திட்டார்.
பிரச்சாரம் இவரது போராயுதம், பேராயுதம்
பிறர்க்கு அளித்திட்டார் இவர் பெருமரியாதை
எளிமை இவருக்கு அகத்தின் ஆடை
பகுத்தறிவே இவரது மகா மாண்பு
அந்த மாண்புடனே, உயர் மாண்புடனே
மனிதனை மனிதனாய் சமதர்ம வாழ்வு வாழ வித்திட்ட
இந்த தமிழ் நாட்டுச்சித்தர் விட்டு சென்ற
பகுத்தறிவும், தமிழுணர்வும்
தலைமுறை தலைமுறையாய் காப்பதோடு
அவற்றை எடுத்துச்சென்றே
நம் நல்லிளம் குழந்தைகட்கு கொடுப்பதோ
யாம் இவர்க்கு செய்யும் பெரும்பணியாம்,
ஈவேரா பெரியார் இவர்!