வானிலை மாறுது
மௌனமாகத்தான் இருந்தது
என் செவிகளின் வானிலை ..
அவளின் வண்ண இதழ்கள்
ஒரு வண்ணத்து பூச்சியின்
சிறகுகள் போல்
படபடத்துக்
கொண்டிருந்த பொழுதும்...!
அவள் கருவிழிப்
பார்வையின் வானிலை
என் கருத்தின் கவனத்தில்
தூறல் பூக்களை
தூவிக் கொண்டிருந்தது...!
இடிமழை முடிந்து
என் வானிலை
வறண்டு போனதும்
உடனிருந்த நண்பன்
கேட்டான்...
ஏன்டா...
இவ்வளவு
வசைபாடுகிறள்
இன்னும் உனக்கு
புத்தி வரவில்லையாவென்று...!