கவிஞனாய் நான், ரசிகையாய் நீ

வனமாக நான் இருக்க
எனை நிரைக்கும் குயிலிசையாய் நீ வந்தாய் எனக்கு!!
பார்கடலாய் நான் இருக்க
எனை துள்ளி குதிக்க செய்யும் கடல் காற்றாய் நீ வந்தாய் எனக்கு!!
சிப்பியாய் நான் இருக்க
முத்து செய்ய சிறு துகளாய் நீ வந்தாய் எனக்கு!!
பட்டாம்பூச்சியாய் நான் இருக்க
எனை ஈர்த்திழுக்கும் தேன் மணமாய் நீ வந்தாய் எனக்கு!!
இசையாய் நான் இருக்க
எனக்கு அர்த்தம் கொடுக்கும் வரிகளாய் நீ வந்தாய் எனக்கு!!
கவிஞனாய் நான் இருக்க
என் பிழை ரசித்து அர்த்தம் கண்டுகொள்ளும்
ரசிகையாய் நீ வந்தாய் எனக்கு!!