அம்மா

இந்த அம்மாக்கள்!!
தோசைக்கல்லையே
நிலாவாக வார்ப்பவர்கள்!!
புரியாத மொழிப்பேசும் மழலைகளின் மொழிப்பெயர்ப்பாளர்கள்!!
தகப்பனின் தன்னம்பிக்கைக்கு தார்கோல்கள்!!
பல விடை தெரியாத வினாக்களுக்கு விரிவுரையாளர்கள்!!
என் பிள்ளைப்போல் யாருமில்லை என்று பெருமை பேசும் பேச்சாளர்கள்!!
கையெழுத்தே இடத்தெரியாவிடினும் கருணையுள்ளங்கொண்ட நீதிபதிகள்!!
இன்னும் இவர்களைப் பற்றி ஆயிரமாயிரம் சொல்லிக்கொண்டே போனாலும்- இவர்கள் எவராலும் எழுத முடியாத மகா காவியங்கள்💜💜

எழுதியவர் : இரா.சுடர்விழி (8-Mar-18, 1:37 pm)
Tanglish : amma
பார்வை : 962

மேலே