மகளிர் தின வாழ்த்து...

கருவில் சுமந்து
உயிராய் பெற்றெடுத்து
நிலாச்சோறு ஊட்டி
பாவாடை சட்டை
மை வளையல் கொலுசு
முத்தம் கொடுத்து வளர்த்த
அன்னைக்கு எனது
மகளிர் தின வாழ்த்துக்கள்....

தூக்கி வளர்த்து
துணி துவைத்து
கால்கழுவி
பாடம் சொல்லி கொடுத்து
பாதுகாப்பாய் பள்ளிக்கு கூட்டி சென்று அழைத்து வந்து அறிவை சொல்லிகொடுத்த
எனது தமக்கைக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்....

கேலி கிண்டல்
ரிமோட் சண்டை
பில்லோ சிதைவு
துரத்தி விளையாடி
கீழே விழுந்து கட்டி
உருண்டு சேறு சகதியோடு
நட்புகொண்டு ஒன்றாய் திரிந்த தங்கைக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

நல்லது கெட்டது
பாசம் நேசம்
அன்பு அக்கறை
அழுகை அரவனைப்பு
தெரிந்தது தெரியாதது
யாவையும் கற்றுகொடுத்து எச்சூழலிலும் துணை நின்று தைரியம் கொடுத்து
வாழ்வை வசமாக்கிய
உயிரில் அங்கம் வகித்த
தோழிக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...

பார்வையால் தீண்டி
உயிரை பலியெடுத்து
இதயம் துடிதுடிக்க
வயது வந்து நான் துடிக்க
அரும்புமீசை காதலை
ஏற்றுகொண்ட சிறுவயது
பால்ய சிநேகிதியான என் காதலிக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..

கதை சொல்லி தூங்கவைத்து
தோல்மீதும் மடிமீதும்
தூக்கிசுமந்து
ஆரிரோ ஆராரிரோ பாடிய ஊர்தெரு திண்ணைக்காரி பாட்டிக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

பாரதி பெண்களாய்
வீறுநடைபோடு..
அன்னை தெரசாவாய்
சேவை செய்...
போராளி பூலாந்தேவியாய் போராடு...
கல்பனா சாவ்லாவாய்
வானம் தாண்டு...
கௌசல்யாசங்கராய்
சமத்துவத்தை பேசு...
அன்னை மீனாம்பாளாய்
சாதிமதத்தை ஒழி...
ஜென்னியாய் காதல்
செய்...
தாமரைபோல் கவிதை பேசு...
திமிராய் எழு
சுயமரியாதை கேள்...
கல்வி சமபங்கு
உரிமை கோர்...
தீயாய் கொழுந்துவிட்டு
எரி அன்பால் அணைத்தால் குளிர்...
நிலவுக்காரியாய் இதம்கொள்...
சூரியனாய் சுட்டெரித்தே இரு கயவர்கள் நிறை இங்கு...பொக்கிஷமே நீ
பொக்கிஷமே புரூஸ்லீயாய் உடலை
திடமாக்கி கொள்...
ஆக்கம் அழிவை உன்வசமாக்கு..
திமிரான பெண்மனி
அழகும் அறிவும் அதிகம் மொத்த உயிர்களையும் நேசி வாழ்வை அற்பணி
இயற்கையை சுவாசி
உலகத்தை பிரசவிக்கும்
மானிட ஒளி நீ
மொத்த அழகின் பிம்பமும் நீ
பெண் மதி அழகு
மனிதி நிலா மண்
தெய்வம் திருமதி
அன்பு காதல்
கவிதை ஆசை
வண்ணம் ஓவியம்
இசை பாடல்
யாவுமாகிய பெண் மனிதியே...

யாவருக்கும் இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்....

..##சேகுவேரா சுகன்..

எழுதியவர் : சேகுவேரா சுகன்.. (8-Mar-18, 3:48 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 136

மேலே