தாய்மை நிறைந்தது

பசி என்றதும் புசியென்று உணவை நீட்டும் கையது தாய்மை நிறைந்தது.
முகவாட்டம் கண்டதும் சிரிப்பூட்ட நினைக்கும் நெஞ்சமது தாய்மை நிறைந்தது.

அநீதி கண்டு அஞ்சாமல் மிரட்டலுக்குப் பணியாமல் வாழும் நேர்மையது
தாய்மை நிறைந்தது.
தனியானாலும் தலைபோனாலும் உழைத்து உழைத்து ரேகை தேய்ந்த கரமது
தாய்மை நிறந்தது.

வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து
வயலில் உழைத்து தன் பிள்ளை வெயிலிலும் மழையிலும் துவளாதிருக்கப் பாடுபடும் மனமது
தாய்மை நிறைந்தது.
தான் பசித்திருக்க, பிறர் பசியாற உதவிக் கண்டு மகிழும் கண்ணது தாய்மை நிறைந்தது.

கண்ணவனாக நம்பிவன் ஏமாற்றினாலும் தன் கருவை அழிக்காமல் பழி சுமந்து வேதனை கடந்து ஈன்றெடுத்து வளர்க்கும் பெண்மையது தாய்மை நிறைந்தது.

கால்களில் விழுந்தது அருள் வேண்டி நிற்க வேண்டும் தாய்மை நிறைந்த பெண்ணிடம்.
அத்திருவாய் திறந்து நிறைந்த மனதோடு நல்லா இரு என்று மொழிந்தாலே போதும்.
நம் பாவமெல்லாம் தீர்ந்தே போகும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Mar-18, 3:23 pm)
Tanglish : thaimai niraindathu
பார்வை : 2208

மேலே