அருள் கீதம்

சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டேன்,
காது கொடுத்துக் கேட்டாயோ?
காதை மூடிக் கொண்டாயோ?
தேவையே இல்லை என்பாயோ?
தேடல்களை எதிர்பார்ப்புகளாகக் கொண்டாயோ?

வீடில்லை, நாடில்லை, கேடில்லை, பாரினிலே ஆறடி நிலம் போதும் நீட்டி நிமிர,
நாங்கடி நிலம் போதும் கால்நீட்டியமர,
இரண்டடி நிலம் போதும் நின்றொடுங்கி போக...

நேசனே!
தாங்கி நிற்கும் தாசனே!
நான் பாடுவதெல்லாம் நின் தயை தானே.
சிந்தைக் குரங்கைச் சிறகடிக்கவிடாமலே சிகரமே!
உன்மேலே சிரங்குவிக்கின்றேனே...

எத்துணை இருந்தாலும் நின் துணைக்கிடாகுமோ?
பாவப்பிறவி அறுக்கும் முடிவில்லானே,
ஆருயிர் உற்றவனே,
நேர்வழி நடத்தும் நாதனே,
நெஞ்சத்தில் பூத்திருக்கும் பூந்தேனே,
ஆண், பெண் என்றிட குறிப்பிட இயலாத ஆன்மனே,
அருள் தருவாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Mar-18, 2:46 pm)
Tanglish : arul keetham
பார்வை : 328

மேலே