சரித்திரம் படைப்போம்

உள்ளங்கை ரேகையில் இல்லை வாழ்க்கை
உனது கையில் இருக்கிறது
உழைத்து பார் உன்னத வாழ்க்கை
உனதருகே வசப்படும் நண்பா!

தொல்லைகள் பல இருக்கலாம்- இருப்பினும்
துவண்டு விடாமல் முன்னேறி பார்
தூக்கி விடுபவர்கள் துணையிருக்கிறார்கள்
துணிந்து நடைபோடு நண்பா!

விடாமுயற்சி எனும் மந்திரத்தை உச்சரித்து
விருட்சமென வளர்ச்சி பெறு
வீணர்களின் மொழிகளுக்கு செவிமடிக்காது
வீண்கவலை மறந்திடு நண்பா!

தோல்விகளைத் தோலில் சுமக்காமல் சட்டென்று
தூக்கிப் போட துணிந்திடு
தூக்கத்திலும் உனது லட்சியம் வெல்ல
துடித்துக் கொண்டிரு நண்பா!

பெயர் வைத்த பெற்றோர்க்கு பாங்குடனே
பெயர் வாங்கித் தர பிறந்தவன் நீ
பல்குத்தும் குச்சியல்ல- உரசியதும்
பற்றிக்கொள்ளும் தீக்குச்சி நீ நண்பா!

சருக்கி விழுந்தாலும் சட்டென்று எழுந்து
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீ
சாதனைகள் பல படைத்து வாழ்வில்
வரலாறு படைப்போம் வா நண்பா!

எழுதியவர் : (9-Mar-18, 10:46 am)
பார்வை : 3438

மேலே