மனிதி

பெருமை கொள்ளடி பேதையே நீ பெண்ணா பிறப்பெடுத்ததற்கு.....
பெண்மையும் நீயே பேராண்மையும் நீயே..
குழந்தையானாலும் குமரியானாலும் குடுத்த அன்பிற்கு குறைவில்லை......
எவ்வளவு வலிகள் இருந்தும் வலிக்காத உன் முகம் எப்படியடி.. உன்னையும் என்னையும் ஒரு கருவில் தானடி படைத்தான் இறைவன்.....
சக்தியின்றி சிவனில்லை என்பது எவ்வளவு உண்மை.. பெண்களான நதிகளே நீங்கள் இல்லையெனில்....
மனிதா! தாய், தாரம், தமக்கை, தங்கை தான்டு தவறாக பாரப்பதும் தவறுதானோ....
முகம் மூடினால் தாரமும் தாசியும் ஒன்றாவாளோ....
குமரியே உன் பெருமை உணர்ந்துதான்(குமரி) கண்டத்திற்கும் உன் பெயரை வைத்தான்....
பெண்மையே காற்றோடு கைவீசு கடல்களோடு கதைபேசு.....
நான்கு சுவர்களுக்குள் உணர்வுகளை உள்ளடக்காமல் உலகிற்கு எடுத்துரை....
மனிதியே உன்னுள் இருக்கும் இறைவியை உணர்வாயாக....

எழுதியவர் : ராம்நாத் (9-Mar-18, 11:01 am)
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே