யாதுமாகி

முதலும் நீ முடிவும் நீ
உயிரணுவில் நீ உடலசைவில் நீ !

அகவை ஐந்தில் பேதை நீ ஆதலின் அரும்பின் துவக்கம் உன்னில் கண்டேன் !
அகவை எட்டில் பொதும்பை நீ ஆதலின் மலர் அவிழும் அழகை கண்டேன்!

அகவை பன்னிரெண்டில் மங்கை நீ
ஆதலின் நறுமுகை பருவம் உன்னில் கண்டேன் !

அகவை பதினெட்டில் மடந்தை நீ ஆதலின் ஆதவன் கண்டு தலை சாயும் ஆம்பலின் நாணம் உன்னில் கண்டேன் !

அகவை இருபத்திரண்டில் அரிவை நீ
ஆதலின் அலரின் நிலைதனில் கானும் பயிர்ப்பை கண்டேன் !

அகவை முப்பதில் நீ தெரிவை ஆதலின் கூந்தல் அமரும் தன்மையில் பூக்கள் கொண்ட கர்வம் உன்னில் கண்டேன் !

அகவை நாற்பது முதலே நீ பேரிளம்பெண் ஆதலின் பொதும்பர் கொள்ளும் ஆனந்த முதிர்வை உன்னில் கண்டேன் !

வீ கொள்ளா (பூ )உயிரில்லை இவ்வுலகில் ஆனால் மாதரில்லா செயலில்லை !

மாதராய் பிரப்பது வரம் ஆயினும் மொட்டவிழும் முன் பொம்மலாகும் நிலை அவள் !

தாயமிர்தம் கள்ளிக்கும் உண்டு ஆனால் நீண்ட துயில் வரமலிக்கும் சோகமும் உண்டு !

சாதனை கதிர்கள் சோதனை குழிகளில்மாதரே மாது அவளுக்கு செய்யும் துரோகம் பல !

விதைத்தவனே (கரு) அறுத்தான் விதை நெல்லை கேட்பார் யாருமில்லா அவலம் இங்கு !

கோயில் கருவரை ஏற்க்கும் இறைவி சிலமாதரின் கருவரை கொள்ள வழியில்லை !

பேதை முதல் பேரிளம் வரை மாதராய் நீர் ஆற்றும் தியாகம் உன் வாழ்வின் யாகம் !

யாதுமகிய மாதர் யாவர்க்கும் சமர்பணம்!!!

உலக மாதர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!!!

-இரா.விஸ்வநாதன்

எழுதியவர் : இரா.விஸ்வநாதன் (9-Mar-18, 11:35 am)
Tanglish : yathumaagi
பார்வை : 83

மேலே