இறைவி
முதுகெலும்பிலிருந்து உதித்தவல் நீ ஆதலால் நீ இன்றி இவ்வுலகின் மனிதர்கள் எவரும் இயங்குவதில்லை !
படைப்பவன் இறைவன் எனில் உலகின் மாதர் யாவரும் இறைவனே!
மரணத்தின் வலியை உணர்ந்து கருவிற்க்கு உயிர் கொடுக்கும் அனங்கிவள் பிறப்பு அகிலத்தில் சிறப்பு !
குருதியும் உணவான அதிசயம் மடந்தையின் வாழ்வின் அற்புதம்!
எங்கோ பிறந்து எங்கோ சேரும் நதியும் வஞ்சியின் வாழ்வும் ஒன்று!
உயிர்களின் ஆதியில் தொடங்கி அந்தம் வரை தொடரும் மாது நீ இன்றி அமையாது உலகு!
உலக பெண்மைக்கு சமர்பணம்!
இரா.விஸ்வநாதன்