தோல்வி

துவளாதே தோல்வி முடிவல்ல துவக்கம் !

நினைவவிற்கொள் வெற்றியை சுவைக்கும் நீ அவ்வெற்றிவிருச்சத்தின் விதை ஓர் தோல்வி என்பதை!

துணிவுகொள் வெற்றி ஓர் அழகிய கனவு தோல்வி அதற்கான ஆயத்த உறக்கம் !

உறுதிகொள் தோல்விகள் போல் ஓர் நல்ல ஆசான் இப்பூமியில் உனக்கான அனுபவத்தையும் பகுத்தறிவையும் பயிற்றுவிக்க இயலாது !

பணிவுகொள் தோல்விகள் தந்த வடு உனது அடுத்த முயற்சிக்கான சீரிய விருது!

பொருமைகொள் வீழும் நீர்வீழ்ச்சி வெகுண்டெழும் பெரும் காட்டாராக அதுபோல் உன் வீழ்ச்சி வெற்றி என்னும் பெருங்கடலை உருவாக்கும்!

இரா.விஸ்வநாதன்

எழுதியவர் : இரா.விஸ்வநாதன் (9-Mar-18, 11:48 am)
Tanglish : tholvi
பார்வை : 92

மேலே